அண்மைய செய்திகள்

recent
-

சிரேஷ்ட உலமா அப்துல் மஜீத் அப்துல் ஜப்பார் சமாதான நீதவானாக நியமனம்

 


அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் சாய்ந்தமருது கிளை முன்னாள் பொருளாளரும், சிரேஷ்ட உலமாவுமான சாய்ந்தமருதை சேர்ந்த அப்துல் மஜீத் அப்துல் ஜப்பார் அகில இலங்கை சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் அம்பாறை மாவட்ட நீதிமன்றத்தில்  நீதவான் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்

சாய்ந்தமருது மத்தியஸ்தசபை ஸ்தாபக உறுப்பினரான இவர் பிரபல சமூக சேவையாளராகவும் திகழ்கிறார். சாய்ந்தமருது கமு/ கமு/ மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலம் சுனாமிக்கு பின்னர் மீளெழுச்சி பெற பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு செயலாளராக, உறுப்பினராக இருந்து செயற்பட்டவர் என்பதுடன் சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தை ஸ்தாபிப்பதிலும் முன்னின்று உழைத்த ஒருவராவார்.

மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பெரியபள்ளிவாசலை ஜும்மா பள்ளிவாசலாக உயர்த்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்களில் முதன்மையான இவர் பல்வேறு பொது அமைப்புக்களின் பிரதானியாக, முக்கிய நிர்வாகியாக இருந்து வருவதுடன் பிரதேச பள்ளிவாசல்களில் தலைவராக, பிரதம இமாமாமாக பதவிவகித்துள்ளதுடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் சாய்ந்தமருது கிளை நிறைவேற்றுக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது





சிரேஷ்ட உலமா அப்துல் மஜீத் அப்துல் ஜப்பார் சமாதான நீதவானாக நியமனம் Reviewed by Author on July 21, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.