மூன்று மாத கால சேவை நீடிப்புக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட மூன்று மாத கால சேவை நீடிப்புக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசியலமைப்பு பேரவை நேற்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடிய போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு ஜூலை மாதம் 9ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று மாத கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு ஜனாதிபதியினால் மார்ச் மாதம் வழங்கப்பட்ட மூன்று மாத சேவை நீடிப்பு ஜூன் மாதம் 25ஆம் திகதியுடன் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது
Reviewed by Author
on
July 15, 2023
Rating:


No comments:
Post a Comment