கொழும்பில் 8 மாடி கட்டிடத்தில் இருந்து மயங்கி விழுந்த இளைஞன் பலி
வெள்ளவத்தை, பெட்ரிகா வீதி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (10) இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த நபர் 8 மாடி கட்டிடத்தில் இருந்து வீழ்ந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வெள்ளவத்தையைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு மயங்கி விழுந்த நிலையில், களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
கொழும்பில் 8 மாடி கட்டிடத்தில் இருந்து மயங்கி விழுந்த இளைஞன் பலி
Reviewed by Author
on
August 11, 2023
Rating:

No comments:
Post a Comment