அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்-பொது மக்களின் உதவியை நாடியுள்ள மன்னார் பொலிஸார்..

 மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள இராணுவ சோதனைச் சாவடிக்கு சற்று தொலைவில் உள்ள கடற்கரை பகுதியில் கடந்த 2 ஆம் திகதி (02-08-2023) மாலை கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண மன்னார் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.


 மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் சுமார் 30 தொடக்கம் 50 வயது மதிக்கத்தக்க 4.8 அடி உயரம் கொண்டது எனவும்,   சடலத்தில் கருப்பு நிற நீள கை சேட்,கருப்பு நிற அரைக்காற்சட்டை மட்டும் நீல நிற பெட்டி சாரம் அணிந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

-மேலும் அவர் அணிந்துள்ள கருப்பு நிற  அரைக் காற்சட்டையில்   (SRI LANKA CRICKET ) என எழுதப்பட்டுள்ளது.

மேலும் அவருடைய கருப்பு நிற நீள கை சேட்  பொக்கட்டில் 120 ரூபாய் பணம் காணப் பட்டுள்ளதோட,குறித்த பொக்கட் குண்டுப்பின்னினால் குத்தப்பட்டுள்ளது.

-குறித்த சடலத்தின் முன் பக்கம் தட்டையாகவும்  பின் பக்கம் முடியும் காணப்படுகின்றது.

எனவே குறித்த சடலம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் அல்லது அடையாளம் காண விரும்புபவர்கள் மன்னார் பொலிஸ் நிலையம் அல்லது மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையுடன் தொடர்பை ஏற்படுத்துமாறு மன்னார் பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.



மன்னாரில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்-பொது மக்களின் உதவியை நாடியுள்ள மன்னார் பொலிஸார்.. Reviewed by Author on August 05, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.