மன்னாரிலிருந்து வாகனத்தில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட சுமார் 150 கிலோ கிராம் எடை கொண்ட கடல் ஆமை உயிருடன் மீட்பு-வாகன சாரதி கைது.
மன்னாரில் இருந்து வாகனம் ஒன்றில் உயிருடன் மறைத்து கொண்டு செல்லப்பட்ட சுமார் 150 கிலோ கிராம் எடை கொண்ட அரிய வகை கடல் ஆமையை மன்னார் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் நேற்று செவ்வாய்க்கிழமை (1) மாலை மீட்டுள்ளது டன் வாகன சாரதியையும் கைது செய்துள்ளனர்.
வாகனம் ஒன்றில் ஆமை கடத்தப்படுவதாக பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செளத்பார் பிரதான வீதி ரெலிக்கொம் சந்தி பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது குறித்த வாகனத்தில் சூட்சுமமான முறையில் ஆமை மறைத்து வைக்கப் பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
மீட்கப்பட்ட கடலாமை நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் கை அளிக்கப்பட உள்ள நிலையில் தற்காலிகமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
குறித்த கடலாமையை வாகனத்தில் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வாகன சாரதி மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரிலிருந்து வாகனத்தில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட சுமார் 150 கிலோ கிராம் எடை கொண்ட கடல் ஆமை உயிருடன் மீட்பு-வாகன சாரதி கைது.
Reviewed by Author
on
August 02, 2023
Rating:
Reviewed by Author
on
August 02, 2023
Rating:






No comments:
Post a Comment