அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது

 மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார், உப்புக்குளம் மற்றும் மூர் வீதி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் போதை மாத்திரைகள் மற்றும் போதை பொருள் அடங்கிய சிகரெட்டுடன் நேற்று (30) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட இருவரும் மன்னார் - உப்புக்குளம் மற்றும் மூர்வீதி பகுதியை சேர்ந்த 21 மற்றும் 22 வயது இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களது உடமையிலிருந்து DAVIDOFF சிகரெட் 09, PREGAB 150mg card 04 Tablet 40, GABIN 75 mg card 12 Tablet 120 கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.


மன்னாரில் போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது Reviewed by Author on August 31, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.