ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான தீர்ப்பிற்கு தடையுத்தரவு
வில்பத்து பிரதேசத்திற்கு அருகில் உள்ள காட்டை அழித்து சுத்தப்படுத்தப்பட்ட பகுதிகளில் மீண்டும் மரங்களை நடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக பிறப்பித்த தீர்ப்பை அமுல்படுத்துவதை தடைவிதித்து உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
ரிஷாட் பதியுதீன் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைக்கு அனுமதியளித்து இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, குறித்த மனுவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான தீர்ப்பிற்கு தடையுத்தரவு
Reviewed by Author
on
August 02, 2023
Rating:

No comments:
Post a Comment