பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்குப் பின்னரும் செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஆவணங்கள் 6 மாதங்களுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் என்ற முந்தைய விதிமுறைகள் நீக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வழங்கப்பட்ட எந்தவொரு சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட பிரதி இருந்தால், புதிய பிரதியை பெற வேண்டிய அவசியமில்லை என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில், கல்வி, வெளிவிவகார அமைச்சுக்கள் மற்றும் குடிவரவு குடியகல்வு மற்றும் ஆட்கள் பதிவு திணைக்களத்திற்கும் அறிவித்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு பதிவேட்டில் திருத்தம் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே புதிய பிரதியை சமர்ப்பிக்க வேண்டும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவிக்கின்றது.
Reviewed by Author
on
August 21, 2023
Rating:


No comments:
Post a Comment