யாழில் இடம்பெற்ற கொலையின் பின்னணி
நபர் ஒருவரை அடித்துக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய 06 சந்தேக நபர்களை யாழ்ப்பாணப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களில் 28 மற்றும் 42 வயதுடைய இரு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர், பெண் சந்தேக நபர் ஒருவரின் 9 வயது மகளை நேற்று முன்தினம் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து குறித்த இரு பெண்களும் குறித்த நபரை கட்டையால் தாக்கியுள்ளனர்.
பின்னர் பெண் சந்தேகநபர்களில் சகோதரன் ஒருவர் மற்றுமொரு நபருடன் சென்று குறித்த நபரை அடித்து மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று கால்களை கட்டி கிணற்றில் மூழ்கடித்து கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் சடலத்தை முச்சக்கரவண்டியில் எடுத்து வந்து உயிரிழந்தவரின் வீட்டில் கைவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபர்கள் கோப்பாய், அரசடி மற்றும் சித்தன்கேணி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதோடு அவர்கள் இன்று (14) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
Reviewed by Author
on
August 14, 2023
Rating:


No comments:
Post a Comment