கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளை அகற்றும் நடவடிக்கையில் பொலிஸார்!
யாழ். நகர்ப் பகுதி முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் இருந்து கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளை அகற்றும் நடவடிக்கையை யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்தனர்.
யாழ். நகர் பகுதியில் இன்று (03) வியாழக்கிழமை காலை முதல் பொலிஸார் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
யாழ். மாவட்டத்தில் வாடகைக்கு செலுத்தும் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டணமானி பொருத்தாமையினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்கள் அதிகளவில் வசூலிக்கப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் இருந்து கட்டணமானி பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
August 03, 2023
Rating:


No comments:
Post a Comment