வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு !
வவுனியா கல்வி வலயத்தில் கந்தபுரம் வாணி வித்தியாலய மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அப்பாடசாலையின் அதிபர் ச. சண்முகரத்தினம் தலைமையில் இன்றைய தினம் பாடசாலையின் மண்டபத்தில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் பாடசாலையின் பகுதித்தலைவர் திருமதி. தனபாலசிங்கம் ஆசிரியர்கள் திருமதி. ப. சிவக்குமார், திருமதி. எஸ். தவநேசன் ஆகியோரும் இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான பெ. விவேகானந்தன், கோ. சிவானந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், பாதணிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு !
Reviewed by Author
on
August 11, 2023
Rating:

No comments:
Post a Comment