மன்னார்- உயிலங்குளம் நெடுங்கண்டல் பிரதான வீதியில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் ஆண் ஒருவர் மீட்பு-மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றம்.
மன்னார் உயிலங்குளம் நெடுங்கண்டல் பிரதான வீதியில் பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (26) இரவு மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் அடம்பன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நெடுங்கண்டல் பகுதியில் நேற்று (26) இரவு 8.30 மணியின் பின்னர் நிகழ்ந்துள்ளதாக தெரிய வருகின்றது.
மீட்கப்பட்ட குறித்த நபர் அடம்பன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கிருந்து உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக குறித்த நபர் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டவர் அடம்பன் தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வருகிறது .
குறித்த நபர் விபத்திற்கு உள்ளானாரா? அல்லது தாக்குதல் சம்பவமா? என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் அடம்பன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
மன்னார்- உயிலங்குளம் நெடுங்கண்டல் பிரதான வீதியில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் ஆண் ஒருவர் மீட்பு-மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றம்.
Reviewed by Author
on
September 27, 2023
Rating:

No comments:
Post a Comment