அவிசாவளை துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி - மேலும் இருவர் காயம்
அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஹல தல்துவ, குருபஸ்கொட வளைவுக்கு அருகில் முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
நேற்று (20) இரவு குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக 119 இலக்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி, பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவர் அவிசாவளை திசையில் இருந்து கேகாலை திசை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மீது டி56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த நால்வர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 27 மற்றும் 36 வயதுடைய தல்துவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த 42 மற்றும் 43 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by Author
on
September 21, 2023
Rating:


No comments:
Post a Comment