யாழில் பழ வியாபாரி ஒருவர் கடத்தல்
யாழில் பழ வியாபாரி ஒருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாப்பாணம் கல்வியங்காடு பகுதியில் 23 வயதுடைய நபரே கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் வியாபாரி கடத்தப்பட்டதாக கோப்பாய் பொலிஸில் முன்வைத்த முறைப்பாட்டில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியிலிருந்து இன்று முற்பகல் 10 மணியளவில் வாகனம் ஒன்றில் வருகை தந்த 12 பேர் கொண்ட கும்பல், பழ வியாபாரியை தாக்கிவிட்டு அவரை கடத்திச் சென்றதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Reviewed by Author
on
September 02, 2023
Rating:


No comments:
Post a Comment