கிளிநொச்சியில் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த காணி விடுவிப்பு
கிளிநொச்சியில் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த ஒரு ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த குறித்த காணியை பாடசாலை பயன்பாட்டிற்காக கையளிக்க இராணுவத்தினரால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காணி கையளிப்பு நிகழ்வு கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நேற்று(14.09.2023) இடம்பெற்றது
இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ள பொது காணி மற்றும் மக்களின் காணிகளை விடுவிக்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் குறித்த காணி பாடசாலை பயன்பாட்டுக்காக இன்றைய தினம் கையளிக்கப்பட்டது.
கிளிநொச்சி டிப்போ சத்தியில் அமைந்துள்ள யுத்த வெற்றி நினைவு தூபிக்கு பின்பகுதியில் அமைந்துள்ள காணியே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் யாழ்ப்பாண இராணுவ கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சுஜீவ கெட்டியாராச்சி காணி விடுவிப்பு ஆவணத்தை அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளார்.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், கரைச்சி பிரதேச செயலாளர் பி.ஜெயகரன், 55வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெயவர்தன, மத்திய கல்லூரி முதல்வர், இராணுவ உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
Reviewed by Author
on
September 15, 2023
Rating:


No comments:
Post a Comment