சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்!
நாட்டின் நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் என்ற வகையில் தனக்கு உள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் பாராளுமன்ற உறுப்பினரால், பொலிஸ் அனுமதி இன்றி, சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசத்தை ஊடுருவி சென்றது. இது இனங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தை இல்லாமல் ஆக்குகிறது.
தற்போது நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அதி கவனத்துடன் செயற்பட கூடிய பொறுப்பு உள்ளது. அப்பொறுப்பில் அவதான குறைவாக செயற்படுவது நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதுடன், சட்ட ஒழுங்கும் பாதிப்படைகின்றது.
எதிர்காலத்தில் நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்த செயற்பாட்டை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், இது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்!
Reviewed by Author
on
September 19, 2023
Rating:
Reviewed by Author
on
September 19, 2023
Rating:


No comments:
Post a Comment