மன்னார் முஸ்லீம் இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிகழ்வு.
மன்னார் மாவட்ட அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட முஸ்லீம் இளைஞர் யுவதிகளுக்கு தலைமத்துவ பயிற்சி வழங்கும் முகமாகவும் சமூக மட்ட பிரச்சினைகளுக்கு எதிராக முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்கான விசேட பயிற்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(3) அகில இலங்கை முஸ்லீம் லீக் முன்னனிகளின் சம்மேளத்தின் தேசிய தலைவர் ஜனாப் லுக்மான் சஹாப்தீன் தலைமையில் மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.
நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் மற்றும் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது மற்றும் சமூக ஒத்திசைவை வலுப்படுத்தல் ,மத நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்ள கூடிய இளைஞர் தலைவர்களை உருவாக்கும் முகமாக குறித்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டு இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு விசேட அழைப்பின் பெயரில் பாராளுமன்ற உறுப்பினர் இந்தியாஸ் பாகீர் மரிக்கார்,இலங்கைக்கான பாலஸ்தீன உதவி உயர்ஸ்தானிகர் ஹிஷாம் அபுதாஹா, கொழும்பு பல்கலைக்கழக பேரசிரியர் மஹீஸ், பராளுமன்ற சிரேஸ்ர ஆராய்சி உத்தியோகஸ்தர் மொஹமட் அஜுவடீன், விரிவுரையாளர் இர்ஹாம் சராபி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள 150 மேற்பட்ட இளைஞர் யுவதிகள் குறித்த ஒரு நாள் பயிற்சி நிகழ்வில் முழுமையாக கலந்து கொண்ட நிலையில் பங்கு பற்றிய இளைஞர் யுவதிகளுக்கான அடுத்த கட்ட பயிற்சி ஒக்டோபர் மாதம்
மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் முஸ்லீம் இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிகழ்வு.
Reviewed by Author
on
September 03, 2023
Rating:
Reviewed by Author
on
September 03, 2023
Rating:












No comments:
Post a Comment