இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயம்!
சிலரால் தாக்கப்பட்டதில் தலாத்துஓயா பொலிஸில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
குருதெனிய வீதியில் நேற்று (17ஆம் திகதி) இரவு 11 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் இருவரும் கடமைகளை முடித்துக் கொண்டு குறித்த இடத்திற்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், இது தொடர்பான விசாரணைகளை தலாத்துஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
September 18, 2023
Rating:


No comments:
Post a Comment