மில்லனிய பகுதியில் நபரொருவர் படுகொலை!
கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் நேற்று (02) மாலை கொலை செய்யப்பட்டுள்ளதாக மில்லனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலை செய்யப்பட்டவர் மில்லனிய கிம்மன்துடாவ பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையை செய்த நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை தேடி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பணத் தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கத்தியால் தாக்கப்பட்ட நபர் பொலிஸாரை நோக்கி ஓடியதாகவும், காயமடைந்த அவரை பொலிஸார் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
Reviewed by Author
on
October 03, 2023
Rating:


No comments:
Post a Comment