சிறுவனுக்கு மதுபானம் கொடுத்த நபர் ஒருவர் கைது!
யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி பகுதியில், 10 வயதுச் சிறுவனொருவனுக்கு மதுபானத்தை அருந்த கொடுத்த ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த சந்தேகநபர் நேற்று (27) சிறுவனுக்கு முச்சக்கர வண்டியினுள் வைத்து மதுபானத்தை அருந்தக் கொடுத்துள்ளார்.
இது குறித்து சிறுவனின் தாயார் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் 35 வயதான குறித்த சந்தேகநபர் நேற்றிரவு சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
சிறுவனின் தந்தை வேலை நிமித்தமாக வெளிநாட்டில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவனுக்கு மதுபானம் கொடுத்த நபர் ஒருவர் கைது!
Reviewed by Author
on
October 28, 2023
Rating:

No comments:
Post a Comment