இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் காலமானார்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் பிஷன் சிங் பேடி 77 வயதில் காலமான சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த லெக் ஸ்பின்னர்களில் ஒருவர் பிஷன் சிங் பேடி. 1966ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வந்த பிஷன் சிங் பேடி, 1979ஆம் ஆண்டு வரை விளையாடியவர். இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 266 விக்கெட்டுகளையும், 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர்.
1971ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடரில் இந்திய அணி வென்றதற்கு முக்கியமான காரணமானவர். கேப்டன் அஜித் வடேகர் காயம் காரணமாக வெளியேறியதால், இந்திய அணியின் கேப்டனாக பிஷன் சிங் பேடி செயல்பட்டார். இவரது கேப்டன்சியில் இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டில் உச்சம் தொட்டது என்றே சொல்லலாம்.
இந்திய அணி தனது முதல் ஒருநாள் வெற்றியை ஈஸ்ட் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 1975 உலகக்கோப்பை தொடரில் பெற்றது. அந்த போட்டியில் 12 ஓவர்கள் வீசி வெறும் 6 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். அதேபோல் அம்ரிஸ்தரில் பிறந்தாலும் டெல்லி அணிக்காக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றார். இதன் மூலமாக முதல்தர கிரிக்கெட்டில் 370 போட்டிகளில் விளையாடி 1,560 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதேபோல் டெல்லி அணிக்கு கேப்டனாக இருந்து இரு முறை ரஞ்சி டிராபி தொடரில் கோப்பையை வென்றுள்ளார். இவரது மகள் அங்கத் பேடி இந்தி சினிமாவில் நடித்து வருகிறார். ஓய்வுக்கு பின் பிஷன் சிங் பேடி தனது மகன் மற்றும் மருமகள் நேஹா தூபியாவுடன் இருந்தார். இந்த நிலையில் பிஷன் சிங் பேடி உயிரிழந்திருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment