கல்முனை ஜாமிஉர் ரஹ்மான் அல்-குர்ஆன் மனன கலாபீடத்தின் நான்கு வருட பூர்த்தியும், பரிசளிப்பு விழாவும்!!
கல்முனை ஜாமிஉர் ரஹ்மான் அல்-குர்ஆன் மனன கலாபீடத்தின் நான்கு வருட பூர்த்தியும், பரிசளிப்பு விழாவும் கல்முனை ரஹ்மான் ஜும்ஆ பள்ளிவாசலில் ஜாமிஉர் ரஹ்மான் அல்-குர்ஆன் மனன கலாபீட அதிபர் அஷ்-ஷெய்க் அல் ஆலிம் எம்.ஐ. ஹாஜா அலாவுதீன் (ஹிழ்ரி) (ஆஷிக் அலி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஹிப்ழுப்பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர முன்னாள் பிரதிமுதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச்செயலாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் கலந்து சிறப்பித்ததுடன் கண்ணியத்திற்குரிய உலமாக்கள், பள்ளிவாசல் நிருவாகிகள், உஸ்தாத்மார்கள், நலன்விரும்பிகள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
கல்முனை ஜாமிஉர் ரஹ்மான் அல்-குர்ஆன் மனன கலாபீடத்தின் நான்கு வருட பூர்த்தியும், பரிசளிப்பு விழாவும்!!
Reviewed by Author
on
October 15, 2023
Rating:

No comments:
Post a Comment