முல்லைத்தீவின் எல்லைக்கிராமங்களில் அதிகரித்துள்ள காட்டு யானைகளின் அட்டகாசம் 1600 க்கு மேற்பட்ட தென்னம்பிள்ளைகள் நாசம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எல்லைக்கிராமங்களான கொக்குதொடுவாய் வடக்கு, கர்நாட்டுக்கேணி பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பலரது தென்னந்தோட்டங்கள் நாசமாகியுள்ளது. இதனால் காட்டு யானைகளின் அட்டகாசத்தை நிறுத்தி தமக்கு வழிவகை செய்யுமாறு கோரி குறித்த கிராம மக்கள் இன்றையதினம் (18.10.2023) அப்பகுதியில் ஒன்று திரண்டிருந்தனர்
கடந்த இரண்டு மூன்று தினங்களாக தொடர்ச்சியாக கிராமங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் அப் பகுதியிலுள்ள தென்னந் தோட்டங்களுக்குள் கூட்டம் கூட்டமாக புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளது.
குறித்த யானைகளின் அட்டகாசத்தால் தென்னை மரங்கள் அழிவடைந்துள்ளதுடன், தென்னந்தோட்ட செய்கையில் ஈடுபட்டவர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
குறித்த பகுதியில் யானைகளின் அட்டகாசத்தால் கிட்டத்தட்ட 1600 க்கும் மேற்பட்ட தென்னம்பிள்ளைகள் அழிவடைந்துள்ளது. அத்தோடு 6 ஏக்கர் பயிரிடப்பட்ட கச்சான், ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்ட மாதுளை செய்கை என்பன முற்றாக அழிவடைந்துள்ளது.
குறித்த பகுதியில் அடிக்கடி வரும் யானைகளினால் தமது தென்னந்தோட்டம் மட்டுமன்றி வாழ்வாதார பயிர்செய்கை நடவடிக்கைகளும் அழிக்கப்படுவதாக தெரிவிக்கும் அம் மக்கள், யானைகளினால் தாம் அப்பகுதியில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த இடத்திற்கு இன்று சென்ற முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கொக்குளாய் விவசாய போதனாசிரியர் தனபாலசிங்கம் துளசிராம், கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் போன்றோர் பாதிப்படைந்த இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டதுடன் மக்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தனர்.
குறித்த இடத்திற்கு இன்று சென்ற முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கொக்குளாய் விவசாய போதனாசிரியர் தனபாலசிங்கம் துளசிராம், கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் போன்றோர் பாதிப்படைந்த இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டதுடன் மக்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தனர்.
முல்லைத்தீவின் எல்லைக்கிராமங்களில் அதிகரித்துள்ள காட்டு யானைகளின் அட்டகாசம் 1600 க்கு மேற்பட்ட தென்னம்பிள்ளைகள் நாசம்
Reviewed by Author
on
October 19, 2023
Rating:
Reviewed by Author
on
October 19, 2023
Rating:

No comments:
Post a Comment