மின்னல் தாக்கி ஒருவர் பலி - மூவர் காயம்
மீன்பிடித்து கொண்டிருந்தோர் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் நேற்று (07) மாலை இடம்பெற்றுள்ளதுடன் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலுவில் வெளிச்ச வீட்டுக்கு அருகாமையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நால்வரே மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதன் போது 34 வயது மதிக்கத்தக்க ஒலுவில் 2 ஆம் பிரிவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தை சுபைதீன் நிஜாமுதீன் மரணம் அடைந்துள்ளதுடன ஒலுவில் ஏழாம் பிரிவைச் சேர்ந்த இல்முடீன் (32) ஒலுவில் இரண்டாம் பிரிவைச் சேர்ந்த எஸ். எம் அஹமட் (50) ஒலுவில் நான்காம் பிரிவைச் சேர்ந்த கே.அஸ்மின் (36) ஆகியோர் காயமடைந்த நிலையில் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதலானது திடீர் காலநிலை மாற்றம் ஏற்பட்ட நிலையில் ஏற்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மின்னல் தாக்கி ஒருவர் பலி - மூவர் காயம்
Reviewed by Author
on
October 08, 2023
Rating:
Reviewed by Author
on
October 08, 2023
Rating:


No comments:
Post a Comment