கிளிநொச்சி-வலைப்பாடு கிராமத்தில் உள்ள கடற்கரையோர பாதுகாப்பை யொட்டி பனை விதைகள் நாட்டி வைப்பு.
கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பொன்னாவெளி கிராம சேவகர் பிரிவில் உள்ள வலைப்பாடு கிராமத்தில் உள்ள கடற்கரை பாதுகாப்பு மற்றும் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் சுற்றுச்சூழல் அபாயங்களை தடுக்க இயற்கை வழங்களைப் பாதுகாத்தல் எனும் தொனி பொருளின் கீழ் நேற்று வியாழக்கிழமை (19) வலைப்பாடு கிராமத்தில் 10000பனை விதை நடுகை செய்ய பட்டு வருகின்றது.
இவ் செயற்பாட்டில் மெசிடோ நிறுவன பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ , பணியாளர்கள் மற்றும் பனை அபிவிருத்தி மாவட்ட முகாமையாளர் பார்த்தீபன் , கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சுதாகரன் , பூநகரி சமாசம் தலைவர் பிரான்சிஸ் ,பூநகரி சமாசம் கிராமிய வங்கி முகாமையாளர் ,வலைப்பாடு அன்னாம்மாள், கடல் தொழில் கூட்டுறவு சங்க தலைவர் திரு பெனடி மாதர் சங்கம் நிர்வாகம் மற்றும் மெசிடோ பெண்கள் குழு மற்றும் கடல் தொழில் கூட்டுறவு சங்க அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி-வலைப்பாடு கிராமத்தில் உள்ள கடற்கரையோர பாதுகாப்பை யொட்டி பனை விதைகள் நாட்டி வைப்பு.
Reviewed by Author
on
October 20, 2023
Rating:
Reviewed by Author
on
October 20, 2023
Rating:


No comments:
Post a Comment