வைத்தியர்களுக்கான திறன் விருத்தி நிகழ்ச்சித் தொடரில் எச்.ஐ.வி மற்றும் பாலியல் தொற்று நோய்கள் தொடர்பான அறிவூட்டல் !!
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையினால் நடத்தப்பட்டுவரும் வைத்தியர்களுக்கான திறன் விருத்தி நிகழ்ச்சித் தொடரின் தொடர்ச்சியாக கடந்த புதன்கிழமை (29) எச்.ஐ.வி மற்றும் பாலியல் தொற்று நோய்கள் தொடர்பான அறிவூட்டல் இடம்பெற்றது.
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியக் கலாநிதி எம்.பி. அப்துல் வாஜித் அவர்களின் தலைமையிலும், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி எம்.என்.எம். யூசுப் அவர்களின் இணை தலைமையிலும் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில், வைத்தியசாலையின் வைத்தியர்களும், பிராந்திய ஆயுள்வேத இணைப்பாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல் உள்ளிட்ட நிந்தவூர் ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்ச்சியின் வளவாளராக பிராந்திய பாலியல் தொற்று நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.என்.எம். தில்ஷான் கலந்து கொண்டார்.
வைத்தியர்களுக்கான திறன் விருத்தி நிகழ்ச்சித் தொடரில் எச்.ஐ.வி மற்றும் பாலியல் தொற்று நோய்கள் தொடர்பான அறிவூட்டல் !!
Reviewed by Author
on
November 30, 2023
Rating:
Reviewed by Author
on
November 30, 2023
Rating:








No comments:
Post a Comment