மன்/ புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் வரலாற்றுச் சாதனை
மன் / புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மெய்வல்லுனர் போட்டியில் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
குறித்த பாடசாலையின் மாணவன் தேசிய ரீதியில் முதலாவது இடத்தைப் பிடித்து தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
கடந்த 03ஆம், 04ஆம், 05ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் Junior national athletic championship 2023 போட்டி நடைபெற்றது.
இதன்போது, Under 13 உயரம்பாய்தல் போட்டியில் P.Promiyan 1.52 M உயரத்தினை பாய்ந்து முதலாம் இடத்தைப்பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.
பாடசாலைக்கு பெருமை சேர்த்த குறித்த மாணவனுக்கு, பாடசாலை சமூகம் உள்ளிட்ட நலன் விரும்பிகள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
மன்/ புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் வரலாற்றுச் சாதனை
Reviewed by Author
on
November 07, 2023
Rating:

No comments:
Post a Comment