பொலிசாரின் கெடுபிடிகளையும் தாண்டி முல்லைத்தீவில் நாளை மாவீரர்களுக்கு அஞ்சலி
முல்லைத்தீவில் பொலிசாரின் கெடுபிடிகளையும் தாண்டி முல்லைத்தீவில் இன்று(27) மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ம் திகதி தமிழ்மக்களால் அனுஸ்ரிக்கப்படவுள்ளது
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாளை அனுஸ்ரிப்பதை தடுக்கும் வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான், மாங்குளம்,மல்லாவி, ஐயன்கன்குளம் ஆகிய பொலிஸ் நிலையங்களை சேர்ந்த பொலிசாரினால் 30 க்கும் அதிகமான நபர்களுக்கு நீதிமன்ற கட்டளைகளை பெற்று வழங்கியுள்ளனர்
இருப்பினும் தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவு கூறாமல் அவர்களது இலட்சினைகளை பாதிக்காமல் விடுதலைப் புலிகளாக அன்றி உயிரிழந்தவர்களை நினைவுகூற முடியும் என நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது
நீதிமன்ற கட்டளையில் குறிப்பிட்ட விடயங்களுக்கு மேலதிகமாக பொலிசார் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஏற்ப்பாடு செய்பவர்களிடம் சென்று கட்டளைகளை வழங்கி சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்ட கூடாது நினைவு வளைவுகள் மாவீரர் துயிலும் இல்லம் என்கிற பெயர் பொறிக்க கூடாது கார்த்திகைப் பூ பாவிக்க கூடாது என்றும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் அவர்களை கைது
ஹாட் என்றும் மிரட்டி வருகின்றார்கள்
இவ்வாறான பின்னணியில் பொலிசாரின் கெடுபிடிகளை தாண்டி முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம், வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் , முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் ,அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம், கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லம், முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம் , இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம் , இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம் ,தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லம் , தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் ஆகிய துயிலும் இல்லங்களிலும் முல்லைத்தீவு நகர கடற்கரையில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திலும், அம்பலவன்பொக்கணை சாள்ஸ் மண்டப வளாகத்திலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் சிறப்பாக மேற்கொள்ள அனைத்து ஏற்ப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என பணிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
எனவே மக்கள் அச்சமின்றி வருகைதந்து தமது உறவுகளுக்கு சுடர் ஏற்றி வணங்குமாறு தெரிவித்துள்ளனர்
பொலிசாரின் கெடுபிடிகளையும் தாண்டி முல்லைத்தீவில் நாளை மாவீரர்களுக்கு அஞ்சலி
Reviewed by Author
on
November 27, 2023
Rating:

No comments:
Post a Comment