வெள்ளத்தில் மூழ்கிய முசலி ஹீனைஸ் நகர் கடற்கரை வீதியை புனரமைத்துத் தருமாறு கிராம மக்கள் கோரிக்கை.
மன்னார் மாவட்டம், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஹுனைஸ் நகர் கிராம மக்கள் மீள்குடியேறி சுமார் 13 வருடங்களாகியும் அவர்களின் அடிப்படை வசதிகள் பல இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருப்பதாக அக்கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கடற் தொழிலை ஜீவனோபாயமாக கொண்டிருக்கும் இக்கிராம மக்களில் பெரும்பான்மையானோர் அண்மைக்காலமாக பெய்து வரும் கடும் மழை காரணமாக கடற்கரை வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியதில் தொழிலுக்கு செல்ல முடியாது பாரிய அசெளகரியங்களை சந்தித்துள்ளனர்.
சுமார் 1.45 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கடற்கரை வீதியில் 100 மீட்டர் தூரம் மாத்திரமே செப்பனிடப்பட்டு உள்ளது. எஞ்சிய பகுதி குன்றும் குழியுமாக காணப்படுவதாலும் மழை காலங்களில் முற்றாக இந்த வீதியை பயன்படுத்த முடியாமல் வெள்ள நீர் வழிந்தோட முடியாதவாறு தேங்கி நிற்கிறது.
அத்துடன் நீண்டகாலமாக பழுதடைந்துள்ள தெரு விளக்குகள் பல இன்னமும் திருத்தப்படாமல் உள்ளது.
பல உள்ளக வீதிகள் இதுவரை அமைக்கப்படாமல் இருப்பதும் உரிய வடிகால் வசதிகள் செய்யப்படாமை காரணமாக பாடசாலை மாணவர்கள் உட்பட இக் கிராம மக்கள் மழை காலங்களில் உள்ளக வீதிகளை பயன்படுத்துவதில் சொல்லனா துயரங்களை அனுபவித்து வருவதோடு அரசியல் ரீதியாக இந்த ஊர் பழிவாங்கப் படுவதாகவும் குறித்த கிராம மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த தெருவிளக்குகளை பொறுத்தித்தருமாறும் உள்ளக வீதிகளை செப்பனிட்டுத் தருமாறும் சீரான வடிகான் வசதிகளையும் அமைத்துதருமாறு ஹுனைஸ் நகர் கிராம மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
வெள்ளத்தில் மூழ்கிய முசலி ஹீனைஸ் நகர் கடற்கரை வீதியை புனரமைத்துத் தருமாறு கிராம மக்கள் கோரிக்கை.
Reviewed by Author
on
November 15, 2023
Rating:
Reviewed by Author
on
November 15, 2023
Rating:







No comments:
Post a Comment