அண்மைய செய்திகள்

recent
-

Zahiriyan Legend Primer League" - 2023 சம்பியன் கிண்ணம் லெஜண்ட் 96 வசமானது

 கல்முனை சாஹிராக் கல்லூரியில் கல்வி கற்ற 46 வயதுக்கு மேற்பட்ட பழைய மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட "Zahiriyan Legend Primer League" - 2023 (ZLPL), கிரிக்கட் சுற்றுப்போட்டித்தொடரின் சம்பியன் கிண்ணம் லெஜண்ட் 96 வசமானது.


பவர் பிளயர் சஹிரியன் 96 அணியின் ஏற்பாட்டில் அவ்வணியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான யூ.கே. காலித்தீன் தலைமையில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைபெற்ற இந்த Zahiriyan Legend Primer League" - 2023 இன் இறுதி நாள் ஆட்டம் இன்று (05) மாலை லெஜண்ட் 90 அணியை எதிர்த்து லெஜண்ட் 96 அணிக்குமிடையில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லெஜண்ட் 90 அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய லெஜண்ட் 96 அணியினர் நிர்ணயித்த 12 ஓவர்களில் 06 விக்கட்டுக்களை மட்டுமே இழந்து 81 ஓட்டங்களை பெற்றனர். பதிலுக்கு 82 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய லெஜண்ட் 90 அணியினர் 09 விக்கட்டுக்களை இழந்து 12 ஓவர்கள் முடிவில் 55 ஓட்டங்களை மட்டுமே பதிவு செய்தனர். 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லெஜண்ட் 96 அணி வெற்றியை பதிவு செய்து சம்பியனானர்.

இச்சுற்றுப் போட்டியில் லெஜண்ட் 90, லெஜ்ண்ட் 91, லெஜண்ட் 92, லெஜண்ட் 94, லெஜண்ட் 95  மற்றும் லெஜண்ட் 96 உட்பட மொத்தம் 06 அணிகள் பங்குபற்றின. அணிக்கு 10 ஓவர்கள் கொண்ட குழுப்போட்டிகளாகவும்,  அரை மற்றும் இறுதி போட்டிகள் 12 ஓவர்கள்  மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களாகவும் வீசப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.

இச்சுற்று தொடரின் தொடராட்டகாரர் விருதை லெஜண்ட் 90 அணியின் எ. எம். ஸாக்கிர் ஹுசைன் பெற்று கொண்டதுடன் ஆட்ட நாயகன் விருதை லெஜண்ட் 96 அணியின் சக்கப் தாரிக் பெற்று கொண்டார்.







Zahiriyan Legend Primer League" - 2023 சம்பியன் கிண்ணம் லெஜண்ட் 96 வசமானது Reviewed by Author on November 05, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.