மாந்தை மேற்கில் இடம் பெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு-
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (5) காலை 10 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆண்டாங்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய விசேட தேவையுடைய மாணவர்களுக்கான தொழில் பயிற்சி நிலையத்தில் 'மாற்றுத் திறனாளிகளுடனும் மாற்றுத் திறனாளிகளாலும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை மீட்டெடுக்கவும் அடையவுமான செயற்பாடுகளில் ஐக்கியமாதல்' எனும் கருப்பொருளில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு இடம்பெற்றது.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கி வரும் மெதடிஸ்த திருச்சபை டெவ்லிங் (DEAF LINK) அமைப்பின் ஏற்பாட்டில், மாவட்ட இணைப்பாளர் எஸ்.என்.நிமால் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மாந்தை மேற்கு சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.யோகிஸ் குமார்,ஆண்டாங்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய பாடசாலை அதிபர் கே.மகேந்திரன்,மெதடிஸ்த திருச்சபை டெவ்லிங் அமைப்பின் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் செல்வி. ஜெய பியூலா,மாந்தை மேற்கு முதியோர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.சந்திரிக்கா மற்றும் விசேட தேவையுடைய மாணவர்கள் பெற்றோர் ,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி விசேட தேவையுடைய மாணவர்களின் நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது.
மேலும் மாணவர்களுக்கு மெதடிஸ்த திருச்சபை டெவ்லிங் அமைப்பினால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மாந்தை மேற்கில் இடம் பெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு-
Reviewed by Author
on
December 05, 2023
Rating:
Reviewed by Author
on
December 05, 2023
Rating:






.jpeg)
.jpeg)
.jpeg)


No comments:
Post a Comment