மன்னார் தீவில் ஏற்படவுள்ள மிகப்பெரிய அழிவுக்கு அரசு சம்மந்தப்படுகிறதா?
மன்னார் தீவில் ஏற்படவுள்ள மிகப்பெரிய அழிவுக்கு அரசு சம்மந்தப்படுகின்றதா?என்கின்ற சந்தேகம் மக்கள் மத்தியிலும்,எங்கள் மத்தியிலும் எழுந்துள்ளது என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று சனிக்கிழமை (9) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
எனினும் மண் அகழ்வு தொடர்பாக பல்வேறு விடையங்களை முன் வைக்க விரும்பு கின்றோம்.மண் அகழ்வில் ஈடுபடுகின்ற தொழிற்சாலைகள் சம்மந்தமாக விழிப்புணர்வுகள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிவதற்காக அரச தரப்பில் பல்வேறு முயற்சிகளை கடந்த வருடம் நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.ஆனால் அரச தரப்பிடம் இருந்து இது வரை எந்த விதமான பதில்களும் எமக்கு கிடைக்கவில்லை.
பல ஆண்டுகளாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் இவ் விடயம் தொடர்பாக வினாவிய போதும் விளக்கம் கோரிய போதும் எவ்வித பதிலும் எமக்கு கிடைக்கவில்லை.
மேலும் மன்னார் பிரதேசச் செயலகத்திடமும் நாங்கள் பல்வேறு விதமான விளக்கங்களை நாங்கள் கேட்டிருந்த போதும் எவ்வித பதிலும் எமக்கு வழங்கப்படவில்லை.
இவ்விடயம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஊடாக நாங்கள் தகவல்களை பெற்றுக்கொள்ள அரசை நாடினோம்.விளக்கம் கோரி பல்வேறு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டது.ஆனால் இதுவரை அனுப்பப்பட்ட விண்ணப்பங்களுக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
மிகப்பெரிய அழிவுக்கு அரசும்,சம்மந்தப்படுகின்றதா?என் கின்ற சந்தேகம் மக்கள் மத்தியிலும்,எங்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
மிகப்பெரிய அழிவுக்கு அரசும்,சம்மந்தப்படுகின்றதா?என்
அவற்றை தெளிவாக நாங்கள் கூறி கொள்ள விரும்புகின்றோம்.29-12-2021 அன்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இதற்காக விளக்கம் கேட்டு நாங்கள் எழுதி இருந்தோம்.
அதற்காகான பதிலை 10-01-2022 அன்று வழங்கி இருந்தார்கள் கோரிய விளக்கங்களை வழங்குவதாக தெரிவித்திருந்தனர்.ஆனால் எவ்வித பதிலும் இல்லை.
தொடர்ந்தும் பல தடவைகள் விளக்கம் கோரி கடிதம் எழுதி இருந்தோம்.எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.இவ்வாறான நடவடிக்கைகள் எமக்கு கவலையளிக்கின்றது.மன்னாரை மிகவும் ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்கின்றனர்.
அரசிடம் பல்வேறு முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டுள்ள போதும் அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வில்லை என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.என தெரிவித்தார்.மேலும் மன்னார் பிரஜைகள் குழு பிரதிநிதிகளும் தமது கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அரசிடம் பல்வேறு முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டுள்ள போதும் அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வில்லை என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.என தெரிவித்தார்.மேலும் மன்னார் பிரஜைகள் குழு பிரதிநிதிகளும் தமது கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மன்னார் தீவில் ஏற்படவுள்ள மிகப்பெரிய அழிவுக்கு அரசு சம்மந்தப்படுகிறதா?
Reviewed by NEWMANNAR
on
December 09, 2023
Rating:

No comments:
Post a Comment