முல்லைத்தீவில் தொடர் மழை காரணமாக 56 கிராமங்கள் பாதிப்பு 68 குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன 56 கிராமங்களைச் சேர்ந்த 976 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது இரண்டு இடைத்தங்கள் முகாம்களில் 68 குடும்பங்களை சேர்ந்த 222 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் சி. கோகுலராஜா தெரிவித்துள்ளார்
முல்லைத்தீவு மாவட்டத்தின் அனர்த்தம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்
அதிகமாக குளங்களைக் கொண்ட மாவட்டமாக காணப்படுவதால் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து குளங்களும் நீர் நிரம்பி வழிகின்றன முத்துஐயன்கட்டு குளத்தின் நான்கு வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன தண்ணிமுறிப்பு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன.
இந்த குளங்களின் கீழ் பகுதிகளில் இருக்கின்ற மக்கள் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றார்கள் வெள்ள நீர் வழிந்து ஓட முடியாத நிலையில் பல்வேறுபட்ட குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் 56 கிராம சேவகர் பிரிவுகள் முல்லத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன 976 குடும்பங்களைச் சேர்ந்த 3010 பேர் இன்று(17) காலை வரை பாதிக்கப்பட்டவர்கள்
இரண்டு இடைத்தங்கள் முகாம்களில் 68 குடும்பங்களை சேர்ந்த 222 அங்கத்தவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றார்கள் அதிகளவான வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் 15 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன இதனால் மக்கள் குடியிருக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பண்டார வன்னி கிராமத்தைச் சேர்ந்த 63 குடும்பங்களை சேர்ந்த 201 அங்கத்தவர்கள் கருவேலன்கண்டல் அ.த.க.பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் புளியங்குளம் பொது நோக்கு மண்டபத்தில் ஐந்து குடும்பங்களை சேர்ந்த 21 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் இவர்களுக்கு சமைத்த உணவு மற்றும் மருத்துவ வசதிகளை வழங்கும் நடவடிக்கையில் அரச திணைக்களங்கள் ஈடுபட்டுள்ளனர்.
கிராமத்தில் உள்ள மக்கள் அனர்த்தங்களால் பாதிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில் கிராம சேவையாளர்களுக்கு தகவல்களை வழங்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவபிரிவு மக்களுக்கு அறிவித்துள்ளது
இவ்வாறு மழைநீர் தேங்குவதற்கான காரணம் நீரோட கூடிய பாதைகள் பகுதிகளில் அத்துமீறிய கட்டிடங்கள் மற்றும் அத்துமீறிய செயல்பாடுகள் இடம்பெற்றுள்ளதால் அதிகளவான நீர் வழி செல்ல முடியாத நிலையில் இந்த அவலம் ஏற்பட்டுள்ளது
தற்போது பெய்து வரும் பருவ மழையானது இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு தொடரக்கூடிய சாத்தியக் கூறு காணப்படுவதால் மேலும் ஒரு காற்றழுத்தம் ஒன்று வங்கக் கடலில் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதால் மக்கள் இதனை கவனத்தில் கொண்டு அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது
முல்லைத்தீவில் தொடர் மழை காரணமாக 56 கிராமங்கள் பாதிப்பு 68 குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைப்பு
Reviewed by NEWMANNAR
on
December 17, 2023
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 17, 2023
Rating:













No comments:
Post a Comment