வட மாகாண ரீதியில் நெற் பயிரில் 'வெண் முதுகு தாவரத்தத்தியின்' தாக்கம் அதிகரிப்பு-.மன்னாரில் அவசர கலந்துரையாடல்
வட மாகாண ரீதியில் நெற் பயிரில் ஏற்படும் பாரிய நோய் தாக்கமான 'வெண்முதுகு தாவரத்தத்தியின்' தாக்கம் தொடர்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (12) மன்னார் மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு தெளிவு படுத்தும் விசேட கலந்துரையாடல் மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள கட்டுக்கரை குள திட்ட முகாமைத்துவக் குழுவின் கேட்போர் கூடத்தில்
வட பிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிலைய உதவி பணிப்பாளர் எஸ். ராஜேஷ் கண்ணாதலைமையில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். இக்கூட்டத்தில் வட மாகாணத்தில் தற்போது நெற் பயிர்களில் பாரிய அளவு சேதத்தை ஏற்படுத்தும் நோய் தாக்கம் தொடர்பாக விவசாய அமைப்பு பிரதிநிதிகளுக்கு பணிப்பாளரினால் தெளிவுபடுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நோய் தாக்கத்தின் பாதிப்புகள் தொடர்பாகவும் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் பாவிக்கப்பட வேண்டிய மருந்துகள் தொடர்பாகவும் பணிப்பாளரினால் விளக்கம் அளிக்கப்பட்டது
இதன் போது நெற்பயிர்ச்செய்கையில் வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்கள் வெண் முதுகு தத்தியினால் பாரிய பிரச்சினைகளுக்கு சவால்களுக்கும் முகம் கொடுத்து வருவதாகவும் இவற்றில் 4 மாவட்டம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வட பிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிலைய உதவி பணிப்பாளர் எஸ். ராஜேஷ் கண்ணா தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஹெக்டெயர் நிலப்பர ப்பும்,கிளிநொச்சி மாவட்டத்தில் 800 ஹெக்டெயர் நிலப்பரப்பும்,முல்லைத்தீவு மாவட்டத்தில் 650 ஹெக்டெயர் நிலப்பரப்பும்,வவுனியா மாவட்டத்தில் 700 ஹெக்டெயர் நிலப் பரப்புமாக பெரும் பரப்பு வயல் நிலங்கள் பாதிப்படைந்துள்ளது.மன்னாரை பொறுத்தவரையில் மிக குறுகிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.இவற்றை கட்டுப்படுத்த விவசாயிகள் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.
வட மாகாண ரீதியில் நெற் பயிரில் 'வெண் முதுகு தாவரத்தத்தியின்' தாக்கம் அதிகரிப்பு-.மன்னாரில் அவசர கலந்துரையாடல்
Reviewed by NEWMANNAR
on
December 13, 2023
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 13, 2023
Rating:


No comments:
Post a Comment