ஒதியமலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் ஒட்டுசுட்டான் பொலிசார் புகுந்து குழப்பம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில் ஒதியமலை படுகொலை நினைவேந்தல் இன்று (02) உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் திகதி அதிகாலை வேளையில் புகுந்த இராணுவத்தினாலும், சிங்கள காடையர்களாலும் ,அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் ஆண்களை சனசமூக நிலையத்திற்கு வரவழைத்துவிட்டு அவர்களது ஆடைகளை களைந்து அவற்றினால் அவர்களை கட்டி 27 பேரை சுட்டும், வெட்டியும் மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்திருந்ததுடன், 5 பேர் கடத்தப்பட்டுப் பின்னர் கொல்லப்பட்டதாகவே உறவினர்கள் கருதுகின்றனர்.
குறித்த ஒதியமலைப் படுகொலையின் 39 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (02) ஒதியமலை சனசமூகநிலைய வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.
39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று(02) நண்பர்கள் 12 மணிக்கு ஆரம்பமாகி நிகழ்வு அமைதியாக முறையிலேயே இடம் பெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென நுழைந்த ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் ஒலிபெருக்கி பாவிப்பதற்கான அனுமதி பத்திரம் பெறவில்லை என தெரிவித்து நிகழ்வில் குழப்பத்தை விளைவித்திருந்தனர்
நிகழ்வின் இடையில் புகுந்த ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் ஒலிபெருக்கிகான அனுமதி பத்திரத்தை காண்பிக்குமாறும் நிகழ்வை நிறுத்துமாறும் கூறினர் இதன்போது அந்த இடத்தில் பாரிய குழப்பநிலை ஏற்ப்பட்டது
திட்டமிட்ட வகையிலே ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி நிகழ்வில் குழப்பத்தை ஏற்ப்படுத்தும் நோக்கோடு திட்டமிட்டு செயற்ப்பட்டதாக அங்கிருந்த மக்கள் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
குறிப்பாக கடந்த 14 ஆண்டுகளாக தாங்கள் நிகழ்வை மேற்கொள்வதாகவும் எந்த பொலிசாரும் குழப்பத்தை விளைவிக்கவில்லை என்றும் நிகழ்வு இடம்பெற்ற நிலையில் திட்டமிட்டு நீங்கள் குழப்புவதாகவும் நீங்கள் மட்டும் திட்டமிட்டு குழப்பத்தில் ஈடுபடுவதாகவும் ஆரம்பிக்க முன்னர் பேசாமல் இருந்து விட்டு இடையில் வந்து குழப்புகிறீர்கள் என கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
இதன் பின்னர் பத்து நிமிடங்களில் நிகழ்வை நிறைவு செய்யுமாறு பொலிசார் கூறிச் சென்றனர் அதன் பின்னர் ஏற்கனவே செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு மாறாக நிகழ்வு இடைநடுவில் நிறைவு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
ஒதியமலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் ஒட்டுசுட்டான் பொலிசார் புகுந்து குழப்பம்
Reviewed by Author
on
December 02, 2023
Rating: 5
Reviewed by Author
on
December 02, 2023
Rating: 5





.jpg)



.jpg)





















No comments:
Post a Comment