பாலியாறு பெருக்கெடுப்பு- மன்னாரில் பல பகுதிகள் நீரில் மூழ்கியது.
மன்னாரில் நேற்றைய தினம் (14) மதியம் முதல் இன்று (15) அதிகாலை வரை பெய்த கடும் மழை காரணமாக கட்டுக்கரை குளம் வான் பாய ஆரம்பித்துள்ள துடன் மன்னார் -யாழ்ப்பாணம் பிரதான வீதி உள்ள பாலியாறு பெருக்கெடுத்துள்ளது.
குறிப்பாக பாலியாறு, சிப்பியாறு, முழுவதும் நிறைந்து வீதிக்கு மேலாக நீர் பாய்ந்து வருவதுடன் அருகில் உள்ள கிராமங்கள் முழுவதும் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
மேலும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆட்காட்டிவெளி மற்றும் மாந்தை கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள வயல் நிலங்கள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது .
அதே நேரம் மன்னார் பிரதேச செயலக பிரிவில் கடும் மழை காரணமாக ஜீவபுரம்,ஜிம்ரோன் நகர்,சாந்திபுரம் போன்ற கிராமங்களும் தீவுக்கு வெளியில் தேத்தாவட,,தேவன் பிட்டி,மூன்றாம் பிட்டி போன்ற கிராமங்களும் நீரில் மூழ்கியுள்ளது.
தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை நிலவும் பட்சத்தில் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலியாறு பெருக்கெடுப்பு- மன்னாரில் பல பகுதிகள் நீரில் மூழ்கியது.
Reviewed by NEWMANNAR
on
December 15, 2023
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 15, 2023
Rating:






No comments:
Post a Comment