வவுனியாவில் 131 பேருக்கு காணி ஆவணங்கள் வழங்கல்
வவுனியாவில் 131 பேருக்கு காணி ஆவணங்கள் வழங்கல்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவில், காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் நெறிப்படுத்தலின் கீழ் வவுனியாவில் 131 பேருக்கான காணி ஆவணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (28.12) இடம்பெற்றது.
வவுனியா பிரதேச செயலகப்பிரிவிலு; உள்ள கணேசபுரம், மணிபுரம், ஆசிகுளம், சமயபுரம் கிராமங்கள் உட்பட பல கிராம மக்கள் நீண்ட காலமாக தமது காணிகளுக்கு காணப்பட்ட அனுமதிப்பத்திரத்தில் இருந்து உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.
வவுனியா பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்தி குழு தலைவருமான கு.திலீபன், உதவி பிரதேச செயலாளர், காணி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:
Post a Comment