சுனாமி நினைவு தின பிரார்த்தனைகளும், ஆராதனை நிகழ்வுகளும்.
சுனாமி நினைவு தின பிரார்த்தனைகளும், ஆராதனை நிகழ்வுகளும்.
உலகை உலுக்கிய அனர்த்தங்கள் பல இருக்கிறது. அதில் சுனாமி அலையின் தாக்கம் தசாப்தங்கள் பல கடந்தும் அழியா நினைவுகள் கொண்டது. அந்த சுனாமியலையில் சிக்கி எமது நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டது. அதில் அம்பாறை மாவட்டத்தின் பாதிப்பு மிக அதிகம். உயிர்கள், உடமைகள், சொத்துக்கள் என பலதையும் இழந்து நின்ற மக்கள் தமது துயரநாளின் 19 வருடங்கள் கடந்துள்ளதை எண்ணி துஆ பிராத்தனைகள், நினைவஞ்சலிகள் நாடுமுழுவதிலும் நடந்து வருகிறது.
அதன் ஒரு அங்கமாக மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு ஏற்பாடு செய்த துஆ பிராத்தனை மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு மண்டபத்தில் அமைப்பின் தலைவர் ஏ.எல்.எம். அன்வர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் குரான் ஓதி தமாம் செய்யப்பட்டதுடன் அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் முன்னாள் பிரதம இமாம் மௌலவி ஏ. எல். எம். மின்ஹாஜ் (உஸ்மானி) துஆ பிராத்தனை செய்தார். நினைவுரையை மௌலவி ஏ. எல். எம். அலீம் (காஸிமி) நிகழ்த்தியதுடன். இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், கிழக்கின் கேடயம் பிரதானி எஸ்.எம். சபீஸ், மாளிகைக்காடு கிழக்கு கிராம நிலதாரி ஏ.எம். நஜீம், அரச அதிகாரிகள், அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகள், குரான் மதரஸா நிர்வாகத்தினர் மற்றும் மாணவர்கள், ஜனாஸா நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள், சமூக பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு மர நடுகையும் இங்கு இடம்பெற்றது.
அல்- மீஸான் பௌண்டசன், ஸ்ரீலங்கா. ஏற்பாடு செய்த நினைவுதின நிகழ்வுகள் சாய்ந்தருதில் அமைப்பின் தவிசாளரின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் துஆ பிராத்தனை இடம்பெற்றதுடன் நினைவுரையும் இடம்பெற்றது.
சுனாமி நினைவு தின பிரார்த்தனைகளும், ஆராதனை நிகழ்வுகளும்.
Reviewed by வன்னி
on
December 26, 2023
Rating:
Reviewed by வன்னி
on
December 26, 2023
Rating:






No comments:
Post a Comment