மன்னாரில் நடன பயிற்சி கல்லூரி அங்குரார்ப்பணம்
மன்னார் டாஸ்லிங் டைமன் நடன பயிற்சி கல்லூரியின் இரண்டாவது நடன பயிற்சி கல்லூரி மன்னார் நகர் பகுதியில் நேற்று (4) வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
மன்னார் நகர் பகுதியில் உள்ள இளைஞர் யுவதிகளின் நடன திறமைகளை மெருகூட்டும் விதமாகவும் சிறுவர்களுக்கு நடன பயிற்சி யை வழங்கும் முகமாக குறித்த நடன பயிற்சி கல்லூரி மன்னார் நகர் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
டாஸ்லிங் டைமன் நடன பயிற்சி கல்லூரியின் நிறுவனர் அர்ஜுன் லெம்பேட் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன்,ஓய்வு பெற்ற அதிபர் ஸ்ரான்லி டிமேல் ,ஒஸ்ரியா நிறுவன மன்னார் கிளையின் முகாமையாளர்,தொழில் அதிபர் துஷி மற்றும் பலர் கலந்து கொண்டனர்
குறித்த நிகழ்வில் டைமன் டான்ஸின் பயிற்சி கல்லூரியினால் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளில் பல்வேறு நடன நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் குறித்த கல்லூரியினால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்கள் கடந்த மாதம் இந்திய நடன கலைஞர்களின் நடுவத்துவத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நடன நிகழ்வில் மன்னாரை பிரதி நிதித்துவப்படுத்தி கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
மன்னாரில் நடன பயிற்சி கல்லூரி அங்குரார்ப்பணம்
Reviewed by Author
on
December 05, 2023
Rating:

No comments:
Post a Comment