மன்னார் சாந்திபுரம் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு வலம்புரிச் சங்குகளுடன் ஒருவர் கைது.
மன்னார் சாந்திபுரம் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு வலம்புரிச் சங்குகளுடன் ஒருவர் கைது.
மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு (4) வலம்புரி சங்கு களுடன் நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) இரவு மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் சாந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் எனவும் அவர் குறித்த நான்கு வலம்புரிச் சங்குகளையும் விற்பனை செய்யும் நோக்கில் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த நபர் வலம்புரி சங்குகளை வைத்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) இரவு சாந்திபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டதுடன்,அவரிடம் இருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு வலம்புரி சங்கு களை மன்னார் பொலிஸ் விசேட பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மற்றும் மீட்கப்பட்ட நான்கு வலம்புரி சங்குகளும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளது.மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Reviewed by வன்னி
on
December 25, 2023
Rating:




No comments:
Post a Comment