மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரச ஊழியர் என்ற வகையில் மக்களுக்கு சார்பாகவும் நேர்மையாகவும் செயற்படுவேன்-மன்னார் நகரசபை ஊழியர்கள்,உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாணம்
மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரச ஊழியர் என்ற வகையில் மக்களுக்கு சார்பாகவும் நேர்மையாகவும் செயற்படுவேன்-மன்னார் நகரசபை ஊழியர்கள்,உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாணம்
மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரச ஊழியர் என்ற வகையில் அரச கொள்கைகளையும்,குறிக்கோள்களையும் நிறைவேற்றுவதற்கு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளை வினைத் திறனுடனும்,பயனுறுதி வாய்ந்ததாக,உறுதியான எண்ணத்துடன்,அதிகபட்ச அர்பணிப்புடன்,நேர்மையாக,மக்கள் சார்பாக நிறைவேற்றுவதாக மன்னார் நகரசபை ஊழியர்கள் இன்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
2024 ஆம் ஆண்டின் கடமைகள் மற்றும் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை காலை மன்னார் நகர சபையில் இடம் பெற்றது.
கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் மன்னார் நகர சபையின் ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் இணைந்து "வலுவான எதிர்காலத்துக்கான தொடக்கவுரை" என்ற அடிப்படையில் புதிய ஆண்டில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை மையப்படுத்தி மக்கள் மைய பொருளாதாரம் ஒன்றை உருவாக்குவதற்கு வினைத்திறன் மிக்க பணிகளை மேற்கொள்வோம் என்ற அடிப்படையில் சத்திய பிரமாணம் செய்து இவ்வருடத்தின் முதல் நாள் கடமைகளை மகிழ்ச்சியுடன் ஆரம்பித்தனர்.
Reviewed by வன்னி
on
January 01, 2024
Rating:









No comments:
Post a Comment