மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை. புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
புதிய ஆண்டிலாவது எமது நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்பட்டு மக்கள் நல்லதொரு வாழ்க்கை வாழ்வதற்கு வழி அமைக்கப்பட வேண்டும்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை.
பிறந்திருக்கும் புதிய ஆண்டிலாவது எமது நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்பட்டு ,மக்களுடைய நன்மைகளை கருதி எமது நாட்டின் தலைவர் களாக இருக்கக்கூடியவர்கள் ஊடக எமக்கு கிடைக்கப் பெற்று மக்கள் படும் துன்பங்களில் இருந்து விடுபட்டு, நல்லதொரு வாழ்க்கை வாழ்வதற்கு அவர்களுக்கு வழி அமைக்கப்பட வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,,,
அன்பானவர்களே 2024 ஆம் ஆண்டு ஒரு புதிய வருடமாக எமக்கு உதிக்கின்றது.நாங்கள் இந்த புதிய வருடத்திலே அனைவரும் மகிழ்ச்சியுடனும்,அமைதியுடனும்,வாழவேண்டும்.நாங்கள் விசேடமாக எங்களை படைத்த இறைவனிடம் இந்h நாட்டில் இருக்கக் கூடிய பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடியை எங்களிடம் இருந்து அகற்றி மக்கள் அனைவரும் உண்மையோடும்,நீதியோடும் வாழ்வதற்கு இறைவன் அருள வேண்டும் என்று நாங்கள் கேட்டு நிற்போம்.
இந்த புத்தாண்டு எமது நாளாந்த வாழ்க்கை யை செழிப்புடனும்,சிறப்புடனும் வாழவும்,எமது நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்பட்டு,மக்களுடைய நன்மைகளை எல்லாம் கருதி எமது நாட்டின் தலைவர்களாக இருக்கக்கூடியவர்கள் எமக்கு கிடைக்கப் பெற்று மக்கள் படும் துன்பங்களில் இருந்து விடுபட்டு,நல்லதொரு வாழ்க்கை வாழ்வதற்கு அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று நாங்கள் ஆசிப்போம்.
2024 ஆம் ஆண்டு எமது திருச்சபையிலே ஒரு செப ஆண்டாக திருத்தந்தையால் நியமனம் பெற்றுள்ளது.
ஆகையால் இந்த புதிய வருடத்தில் நாங்கள் எமது செப வாழ்க்கை யை ஆழப்படுத்தி இறைவனோடு இணைந்து நல்லதொரு வாழ்க்கை வாழ இறைவன் எங்கள் ஒவ்வொருவருக்கும் அருள்வாராக.
உங்கள் அனைவருக்கும் எனது அன்பு கலந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை. புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
Reviewed by வன்னி
on
January 01, 2024
Rating:
Reviewed by வன்னி
on
January 01, 2024
Rating:


No comments:
Post a Comment