நோர்வேயில் தமிழ் பெண் மருத்துவர் படுகொலை.
நோர்வேயில் தமிழ் பெண் மருத்துவர் படுகொலை.
நோர்வேயில் 30 வயதுடைய தமிழ் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் வெளியிட்டுள்ளது.!!!
கடந்த செவ்வாய்க்கிழமை (02.01.2024) நோர்வேயின் எல்வெரும் (எல்வெரும்) பகுதியில் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
புத்தாண்டு தினத்தில் படுகொலை செய்யப்பட்ட அவர், உயிரிழந்த பெண்ணின் உடலில் பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள்
மேலும் அவர் ஒரு பல் மருத்துவர் எனவும் அவருக்கு நீண்டகாலமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரின் சடலமும் சடலம் கண்டெடுக்கப்பட்ட காரில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலைமிரட்டல் தொடர்பில் உயிரிழந்த பெண் பொலிஸில் பலமுறை முறையிட்டும் அவர் தொடர்பில் உரிய கவனம் செலுத்தவில்லை என குடும்பத்தினர் முன்னர் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by வன்னி
on
January 07, 2024
Rating:


No comments:
Post a Comment