சாய்ந்தமருது அக்பர் பள்ளிவாசல் மையவாடியில் சிரமதான நிகழ்வு!
சாய்ந்தமருது அக்பர் பள்ளிவாசல் மையவாடியில் சிரமதான நிகழ்வு!
"நிச்சயிக்கப்பட்ட வீட்டினை சுத்தம் செய்வோம்" என்ற தொனிப்பொருளில் சாய்ந்தமருது அக்பர் பள்ளிவாசல் மையவாடியில் சிரமதான நிகழ்வு ஒன்று இன்று OG சொசைட்டியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கு OG விளையாட்டு கழகம், ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை மற்றும் இயற்கை நேசிக்கும் மன்றம் என்பன ஒத்துழைப்பை வழங்கியிருந்தது. இம் மையவாடியில் மரங்கள் வளர்ந்து காணப்பட்டமையினால் ஜனாஸா அடக்குவதற்கு உகந்த நிலையில் காணப்படாமையினை கண்ணுற்ற OG சொசைட்டி அமைப்பினர் இதனை சுத்தம் செய்து ஜனாஸா அடக்குவதற்கு உகந்த மையவாடியாக மாற்றி உள்ளனர்.
இச்சமூகப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களுக்கும் மற்றும் கனரக இயந்திரம், திண்ம கழிவகற்றும் இயந்திரம் என்பவற்றை தந்து உதவிய கல்முனை மாநகர சபைக்கும் OG சொசைட்டி அமைப்பினர் நன்றியை தெரிவித்தனர்.
Reviewed by வன்னி
on
January 07, 2024
Rating:







No comments:
Post a Comment