கிளிநொச்சி விபத்து - கணவரையும் மகனையும் வெளிநாட்டுக்கு வழியனுப்பி திரும்பிய பெண் விபத்தில் பலி.
கிளிநொச்சி விபத்து - கணவரையும் மகனையும் வெளிநாட்டுக்கு வழியனுப்பி திரும்பிய பெண் விபத்தில் பலி.
கிளிநொச்சி A9 வீதியின் ஆனையிறவை அண்மித்த பகுதியில் இன்று (24:01:2024) அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியில் சென்று கொண்டிருந்த எருமை மாடுகளுடன் மோதி வேன் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவர்களில் மாடுகள் கொண்டு வந்த நபா் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, விபத்தில் 9 எருமை மாடுகள் உயிரிழந்துள்ளதுடன் நான்கு மாடுகள் காயமடைந்துள்ளன.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Reviewed by வன்னி
on
January 24, 2024
Rating:









No comments:
Post a Comment