தொடர் பணியில் 'ஏர்நிலம் ' மலையகம் நோக்கியும் பயணம்.
தொடர் பணியில் 'ஏர்நிலம் '
மலையகம் நோக்கியும் பயணம்.
“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வார் பயன்தெரி வார்”…..
தாயகம் சுண்டுக்குளி,யாழ்பாணத்தை பிரப்பிடமாகவும் ஜெனீவா சுவிட்சர்லாந்தை வசிப்பிடமாக கொண்ட
இறைவனடிசேர்ந்த
அமரர் பூபாலசிங்கம் மங்கையற்கரசி அவர்களின் 11ஆம் ஆண்டு
நினைவு நாள் 11.01.2024 அன்றாகும்.
அவர்களின் நினைவுநாளில்
"ஏர் நிலம்" நாமும் வணங்குகின்றோம்.
மலையகம் கேகாலை,பலர் கோ பிட்டிய பகுதியில் வறிய நிலைவாழ் குடும்பங்களை சேர்ந்த 60 மாணவர்களுக்கான மழைகால பாதுகாப்பு குடைகள் 21.01.2024 அன்று அருட்தந்தை கொன்சலஸ் அடிகளாரின் வேண்டுதலுக்கிணங்க வழங்கி வைக்கப்பட்டது..
இவ் நற்பணிக்கு நிதி நல்கிய
அவரது பேரன் செல்வன்
உருத்திரன் உதயகுமாரன் அவர்களுக்கு ஏர் நிலத்தின் அன்பான நன்றிகளும் வாழ்த்துக்களும்…
அமரர் பூபாலசிங்கம் மங்கையற்கரசி அவர்களின் பெயர் தாங்கி பல்வேறு நற்பணிகள் தாயகத்தில் இடம்பெற்று வருகின்றமை போற்றுதலுக்குறியது
இப் பணிகளை ஏர் நிலத்தோடு இணைக்கும் அவரது மகன் திரு.பூபாலசிங்கம்-உதயகுமாரன்(உதயன்) அவர்களுக்கும் நன்றி…
இவ் பணிதனை நிறைவாக்கிய
"ஏர் நிலம் " செயலாற்றுனர்
மன்னார் பெனில் நிறைவாக்க உதவிய செயலாற்றுனர்கள்,
மலையக வாழ் உறவுகள்,
வணக்கத்துக்குரிய அருட்தந்தையர்கள்
மற்றும்
அனைவருக்கும் அன்பான நன்றிகள்.
பணி ஒழுங்கமைப்பு:-
து.திலக்(கிரி),
-ஏர் நிலம்-
Reviewed by வன்னி
on
January 28, 2024
Rating:





No comments:
Post a Comment