அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு - கிழக்கில் முதல் முறையாக ஊடக அமைப்பின் தலைவராக பெண் ஒருவர் தெரிவு

 வடக்கு - கிழக்கில் முதல் முறையாக ஊடக அமைப்பின் தலைவராக பெண் ஒருவர் தெரிவு




வடக்கு - கிழக்கு மாகாணங்களில் ஊடக அமைப்பு ஒன்றின் தலைவராக முதல் முறையாக வவுனியா மாவட்டத்தில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவாகியுள்ளார்.


வவுனியா மாவட்டத்தில் கடந்த 12 வருடங்களாக செயற்பட்டு வரும் வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவு வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் பாலம்பிகை மண்டபத்தில் நேற்று (04.02) மாலை இடம்பெற்றது.


இதன்போது, வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவராக திருமதி சிவகுமார் திவியா அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். வடக்கு கிழக்கில் முதல் முறையாக பெண் ஒருவர் ஊடக அமைப்பு ஒன்றின் தலைவராக வருவது இதுவே முதல் முறையாகும். வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் ஒரேயொரு பெண் ஊடகவியலாளர் அங்கத்துவம் வகித்த நிலையில் அதற்கான சந்தர்ப்பத்தினை ஏனைய ஊடகவியலாளர்கள் ஒருமித்து வழங்கியிருந்தார்கள்.


அத்துடன், சங்கத்தின் செயலாளராக சி.கஜேந்திரகுமார் அவர்களும், பொருளாளராக சிறிதரன் மனோஜ் அவர்களும், உபதலைவராக இராசையா ஜெய்சங்கர் அவர்களும், உப செயலாளராக வரதராசா பிரதீபன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.


சங்கத்தின் ஆலோசகராக முன்னாள் தலைவர் சு.வரதகுமார் அவர்களும், கணக்காய்வாளராக இ.சற்சொரூபன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.





வடக்கு - கிழக்கில் முதல் முறையாக ஊடக அமைப்பின் தலைவராக பெண் ஒருவர் தெரிவு Reviewed by வன்னி on February 05, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.