அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் இடம்பெற்ற 76ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்.

 முல்லைத்தீவில் இடம்பெற்ற 76ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்.




முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (04) காலை 8.30 மணியளவில் இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.


இதன்போது தேசிய கொடியை பிரதம விருந்தினர் ஏற்றி வைத்ததனை தொடர்ந்து தமிழ்  மற்றும் சிங்கள மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. 


இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் கலந்து கொண்டதுடன், சர்வமத தலைவர்கள், முல்லைத்தீவு  பொலிஸ் பொறுப்பதிகாரி அமரசிங்க, முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன், விமானப்படை , பொலிஸார், இராணுவத்தினர் 

மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டதுடன் அணிவகுப்பும் இடம்பெற்றிருந்தது.


நிகழ்வில் சமூக பாதுகாப்பு நன்கொடை நிதி வழங்கி வைக்கப்பட்டதுடன், விவசாயத்தை ஊக்குவிக்கும் முகமாக இருசக்கர உழவியந்திரங்கள் 4 வழங்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து மரநடுகையை ஊக்குவிக்கும் முகமாக மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் கலந்து கொண்ட அதிதிகளால் மரநடுகை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
















முல்லைத்தீவில் இடம்பெற்ற 76ஆவது சுதந்திரதின நிகழ்வுகள். Reviewed by வன்னி on February 04, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.