நானாட்டானில் சிறப்பாக இடம் பெற்ற இளைஞர்களுக்கான தொழில் சந்தை
நானாட்டான் பிரதேசச் செயலகம் மற்றும் அட்ரா நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் சந்தை இன்று புதன்கிழமை (28) காலை நானாட்டான் பிரதேசச் செயலகத்தில் இடம்பெற்றது.
-நானாட்டான் பிரதேசச் செயலாளர் சிவசம்பு கனகாம்பிகை தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டார்.
-இதன் போது தொழில் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்,யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது தொழிற்பயிற்சி அதிகார சபை,தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்,தேசிய இளைஞர் படையணி உள்ளடங்களாக தொழில் சார் கற்கை நெறிகளை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தமது தொழில் பயிற்சிகள் தொடர்பாக தெளிவு படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
February 28, 2024
Rating:


No comments:
Post a Comment