வவுனியா பேருந்து நிலையத்தில் நடந்த மோட்டார் சைக்கிள் திருட்டு ,....
வவுனியா புதிய பேரூந்து நிலையம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டர் சைக்கிள் திருட்டு
வவுனியா, புதிய பேரூந்து நிலையம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார்
தெரிவித்தனர்.
வவுனியா, புதிய பேரூந்து நிலையம் அருகில் மோட்டர் சைக்கிள் ஒன்றை இரவு நிறுத்திவிட்டு கொழும்பு பயணித்த ஒருவர் மறுநாள் பகல் வந்து பார்த்த போது அவரது மோட்டர் சைக்கிள் விட்ட இடத்தில் காணப்படவில்லை. அப் பகுதியில் தேடிய போதும் மோட்டர் சைக்கிள் கிடைக்காத நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, மோட்டர் சைக்கிள்களை பொது இடங்களில், வீதியோரங்களில் நிறுத்தி விட்டு தூர பயணங்களை மேற்கொள்ளாது அதனை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி விட்டு செல்லுமாறு வவுனியா பொலிசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
Reviewed by Author
on
February 26, 2024
Rating:


No comments:
Post a Comment